சீரடி சாய்பாபா பிறந்தநாள்: விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு
ADDED :2465 days ago
திருவள்ளூர்: திருவள்ளூர் பஜாரில் உள்ள ஆனந்த சாய்ராம் தியானம் கூடத்தில், சாய்பாபா பிறந்தநாள், ராம நவமியை முன்னிட்டு மூலவர் சாய்பாபாவை பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.
திருவள்ளூர் பஜாரில் உள்ள ஆனந்த சாய்ராம் தியானம் கூடத்தில் சாய்பாபா பிறந்தநாள், ராம நவமியை முன்னிட்டு மூலவர் சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடைபெற்றது. தென்னங்குருத்து இளநீர் பனங்காய் ஈச்சங்காய் மூலம் சிறப்பு அலங்காரத்தில் பாபா பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பாபாவை ஏராளமான பெண் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.