உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)

தமிழ் புத்தாண்டு (விகாரி வருடம்) ஏப்ரல் 14ம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. உங்கள் நட்சத்திரத்திற்கான பலன் ..

மிருகசீரிடம் 3,4ம் பாதம்: துணிச்சலான செயல்களில் விருப்பமுடன் ஈடுபடுவீர்கள். கவனம் தேவை. அலுவலகத்தில் முன்னேற்றமான சூழல் நிலவும். பணவரவுக்கு குறைவிருக்காது. ஆனால் திடீர் செலவால் பணம் கரையும். 2019 அக்டோபர் முதல் கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஆடை, ஆபரணம், வாசனைத் திரவிய சேர்க்கையும் அவற்றால் லாபமும் கிடைக்கும்.

திருவாதிரை: அரசு வகையில் நன்மை கிடைக்கும். விரைவில் வேலை, திருமணம், குழந்தைப்பேறு போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். கடன்கள் அதிகமாகும். ஆனால் சுபவிஷயத்திற்காக கடன் வாங்குவதால் கவலைப்பட மாட்டீர்கள். 2019 அக்டோபர் முதல்  நல்லவர்களின் நட்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சிக்கான சூழல் அமையும்.

புனர்பூசம்1,2,3ம் பாதம்: நல்ல நேரம் வந்து விட்டது. குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். மாணவர்கள் பள்ளி, கல்லுாரியில் நற்பெயர் பெறுவர். மணமான பெண்கள் புகுந்தவீட்டினால் பாராட்டப்படுவர். 2019 அக்டோபர் முதல் திருமணத் தடை நீங்கும். பயணத்தால் மகிழ்ச்சி ஏற்படும். பணியாளர்களை அதிகாரிகள் பாராட்டுவர். உங்கள் துணையின் மீது அன்பு மேலோங்கும். வாழ்வில் இனிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !