உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)

தமிழ் புத்தாண்டு (விகாரி வருடம்) ஏப்ரல் 14ம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. உங்கள் நட்சத்திரத்திற்கான பலன் ..

பூரட்டாதி 4ம் பாதம்: பிள்ளைகள் பற்றிய கவலை பறந்தோடும். திடீர் பயணத்தால் மனம் மகிழ்வீர்கள். அரசியல்வாதிகள் பிரச்னைக்கு உள்ளாகி விலகுவர். 2019 அக்டோபர் முதல் உடல்நலனுக்காக சிகிச்சை செய்ய நேரிடும். நண்பர்களால் உதவி உண்டு.  கலைத்துறை, எழுத்துத்துறையினர் முன்னேற்றம் காண்பர். ஆன்மிகவாதிகள், ஜோதிடர்கள் புகழ் பெறுவர். சுபவிஷயத்தில் நல்ல முடிவு கிடைக்கும்.  

உத்திரட்டாதி : சமூகத்தில் அந்தஸ்து உயரும். கடன் தொல்லை குறையும். கடல் சார்ந்த, வெள்ளை நிறப் பொருட்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். ஆடம்பர வசதிகள் பெருகும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அரசுப்பணிகளில் விழிப்புடன் இருப்பவருக்குப் பிரச்னை வராது. 2019 அக்டோபர் முதல் திட்டமிட்ட முக்கிய செயல் நிறைவேறும். பெரிய மனிதர்கள், மேலதிகாரிகள் உதவி செய்வர்.

ரேவதி : எழுத்தாளர், பத்திரிகையாளர், கலைஞர்களுக்கு செழிப்பான காலகட்டம். அலைச்சலால் உடல் அசதிக்கு ஆளாவீர்கள். வாழ்க்கைத் துணைவரால் நன்மை உண்டாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். 2019 அக்டோபர் முதல் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தந்தையாலும், அரசு வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !