உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ராமநவமி விழா

சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ராமநவமி விழா

 அலங்காநல்லுார்:அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ராமநவமி விழாவையொட்டி ராமர் சன்னதியில் ராமர், லட்சுமணன், சீதை மற்றும் ஹனுமன் சிலைகளுக்கு நுாபுரகங்கை தீர்த்தம் உட்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம், திருமஞ்சனம்  நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம், பூஜை, தீபாராதனை நடந்தது.திருப்பரங்குன்றம்வீர ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் ஏப்., 7ல் ராம நவமிக்கான சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் துவங்கியது. ஏப்.,12ல் ஸ்ரீராமநாம ஜெபம் நடந்தது. காலை 6:00 மணிக்கு மகா சுதர்சன  ஹோமம் முடிந்து உற்ஸவர்கள் ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவசம் சார்த்துப்படியானது.விளாச்சேரி பட்டாபிஷேக ராமர் கோயிலில் 7 நாட்களாக நடந்த லட்சார்ச்சனை நேற்று பூர்த்தி செய்யப்பட்டு, மூலவர்களுக்கு அபிஷேகம் முடிந்து தொடர்  ராமநாம ஜெபம் நடந்தது. சோழவந்தான் அக்ரஹாரத்தில் ராமபக்த சபா சார்பில் ராமநவமி உற்ஸவம் ராமநாம பாராயணம் அர்ச்சனையுடன் துவங்கியது. ராமஜெனனம் என்ற தலைப்பில் முரளிதரசர்மா சொற்பொழிவாற்றினார். ஏப்.,17 காலை 10:00 மணிக்கு சீதாராம  திருக்கல்யாணம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !