உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பதஞ்சலீஸ்வரர் கோவிலில் சிவன் மீது சூரிய ஒளி

பதஞ்சலீஸ்வரர் கோவிலில் சிவன் மீது சூரிய ஒளி

காட்டுமன்னார்கோவில்: கால்நாட்டாம்புலியூர் பதஞ்சலீஸ்வரர் கோவிலில் சிவன் மீது சூரிய ஒளி படும் நிகழ்வில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


கடலுார் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த கால்நாட்டாம்புலியூரில், அம்புசாஷி அம்பிகா உடனுறை பதஞ்சலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் ஒன்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில், ஒன்றாம் தேதி சூரியன் சிவனை தரிசிக்கும் நிகழ்வு நடக்கும். அதன்படி, சித்திரை முதல் நாளான நேற்று, சூரிய ஒளி நேராக மூலவர் சிவன் மீது படும் அதிசய நிகழ்வு நடந்தது.  காலை ௬:05 முதல் ௬:15 வரை ௧௦ நிமிடம் நீடித்த இந்த நிகழ்வில், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !