வழிமேல் விழிவைத்த சபரி
ADDED :2464 days ago
சீதையைத் தேடியபடி ராமரும், லட்சுமணரும் காட்டில் இருந்த மதங்க மகரிஷியின் ஆஸ்ரமத்திற்கு வந்தனர். அவரின் சிஷ்யையான சபரியைக் கண்டனர். அவள் தனது குருநாதரின் அறிவுரைப்படி 12 ஆண்டுகளாக ராம தரிசனம் பெற வழிமேல் விழி வைத்து காத்திருந்தாள். காட்டில் சேகரித்த இலந்தைப் பழம், தேன், கிழங்குகளை உண்ணக் கொடுத்தாள். அவளது அன்பு கண்ட ராமர் ஆனந்தக்கண்ணீர் வடித்தார். அவரிடம், “ஐயனே! இன்று உங்களை தரிசிக்கும் பேறு பெற்றேன். உங்களைக் காண்பதற்காக இவ்வளவு காலம் என் உயிரைத் தாங்கியிருந்தேன். பிறவிப்பயனைப் பெற்று விட்டேன்” என வணங்கினாள். அவளது உயிர், ஜோதி வடிவில் விண்ணுலகம் சென்றது.