மாசி மகத்தன்று செல்ல வேண்டிய கோயில் ..
ADDED :5003 days ago
மாசி மாதத்தை மாதங்களின் சிகரம் என்றும் கும்பமாதம் எனவும் கூறுவார்கள். மாசி மாதத்தில் மகநட்சத்திரத்துடன் பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளே மாசி மகம். இந்த நாளில் மகம் நட்சத்திரத்திற்கே உரிய கோயிலான தவசிமேடை மகாலிங்கேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபட்டால் சகல சவுபாக்கியங்கள் கிடைக்கும், நீண்ட கால பிரார்த்தனை நிறைவேறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. அத்துடன் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவர்களும் மாசிமகத்தன்று இந்த கோயிலுக்கு சென்று வழிபடுவது சிறப்பிலும் சிறப்பு.