சுமுக விநாயகர் கோவிலில் சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை
ADDED :2410 days ago
புதுச்சேரி: புதுச்சேரி ரெயின்போ நகர் சுமுக விநாயகர் கோவிலில், சித்ரா பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது.இதனையொட்டி, காலை 8:00 மணிக்கு கணபதி பூஜை, துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஹோமமும், மகா அபிஷேகம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு கரும்புக்கால் புஷ்ப பந்தலின் கீழ் துர்க்கை அம்மனுக்கு, சந்தனகாப்பு அலங்காரத்துடன் 108 நெய் விளக்குள் ஏற்றி வைத்து, 60 வகையான பட்சணங் கள், பழங்கள் மற்றும் படையல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8:00 மணிக்கு சோடச உபசார மகா தீபாராதனை நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.