நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :2411 days ago
இடைப்பாடி: இடைப்பாடி, நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், சித்திரை தேர் திருவிழா, கடந்த, 12ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று, திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, நஞ்சுண்டேஸ்வரர், தேவகிரி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. அதில், திரளான கட்டளைதாரர்கள் பங்கேற்றனர். திருவிழா குழுவை சேர்ந்தவர்கள், ஐந்து ஊர்கவுண்டர்கள், அனைத்து சமூக முக்கிய பிரமுகர்கள், மக்கள், தரிசனம் செய்தனர்.