கொளஞ்சியப்பர் சுவாமிக்கு விசாக நட்சத்திர வழிபாடு
ADDED :2490 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில், சுவாமிக்கு விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு நடந்தது.
விருத்தாசலம், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில், முருகன் சுவாமியின் விசாக நட்சத்திரத்தையொட்டி, நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. வெள்ளிக்கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது. மாலை சுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.