தென்காசியில் திருக்குறள் முற்றோதுதல் வேள்வி
ADDED :5003 days ago
தென்காசி : தென்காசியில் திருக்குறள் முற்றோததல் வேள்வி நடந்தது. தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் 203வது திருக்குறள் முற்றோதுதல் வேள்வி நடந்தது. திருவள்ளுவர் கழக பொதுக்குழு உறுப்பினர் முத்தையா சார்பில் நடந்த இவ்வேள்விக்கு சதாசிவம் தலைமை வகித்தார். செயலாளர் சிவராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். ஆய்க்குடி-கிளாங்காடு வரதய்யன் கிராமம் சுப்பிரமணி சேரிடரி டிரஸ்ட் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாலையில் நடந்த விழாவிற்கு செல்வராஜ் தலைமை வகித்தார். அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் நாறும் பூநாதன் "புலவி நுணுக்கம் என்ற அதிகார ஆய்வுரையாற்றினார். குமார், ராசாமுகமது, சதாசிவம், மாடசாமி கலந்துரையாடல் நடத்தினர். துணை செயலாளர் கருப்பசாமி நன்றி கூறினார்.