ராமச்சந்திர மூர்த்தி பட்டாபிஷேக உற்சவம்
ADDED :2721 days ago
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி பஜனை மடத்தில் ராமச்சந்திர மூர்த்தி பட்டாபிஷேக உற்சவம் நடந்தது.விக்கிரவாண்டி பஜனை கோவிலில் சித்திரை புது வருட பிறப்பை முன்னிட்டு சீதாதேவிக்கும் ராமச்சந்திர மூர்த்திக்கும திருக்கல்யாண உற்சவம் நடந்ததுஇதையடுத்து ராமச்சந்திரமூர்த்தி பட்டாபிஷேகத்தை முன்னிட்டு சீதா தேவி உடனுறை ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு திருமஞ்சணம் நடந்தது.பின்னர் ராமச்சந்திரமூர்த்திக்கு பட்டாபிஷேக உற்சவம் நடந்து. இரவு சுவாமி வீதி உலா நடந்தது. அபிஷேகம் மற்றும் உற்சவத்தை கோகுல ராமனுஜதாசன் செய்தார். விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரவி தலைமையில் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.