சஞ்சீவிராயன்பேட்டையில் சதனபுரீஸ்வரர் தேரோட்டம்
ADDED :5070 days ago
திண்டிவனம் : திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டை சச்சிதானந்தவல்லி உடனுறை சதனபுரீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழா நடந்தது. திண்டிவனம் சஞ்சீவிராயன் பேட்டையில் உள்ள சச்சிதானந்தவல்லி சமேத சதனபுரீஸ்வரர் கோவிலில் ஆண்டு பெருவிழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவையொட்டி கடந்த மாதம் 25ம் தேதி காலை வேள்வி வழிபாடும், விழா கொடியேற்றமும் நடந்தது. தொடர்ந்து 4ம் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. நிகழ்ச்சின்போது அபிராமி அந்தாதி மகளிர் குழுவினர், சதனபுரீஸ்வரர் மற்றும் அபிராமி அந்தாதிகள் பாடினர். நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு, புதிய திருத்தேரில், சுவாமியும் அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்து வீதியுலா வந்தனர். நேற்று விடையாற்றி உற்சவம் நடந்தது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் நடராஜன் மற்றும் வடிவேல், அனந்தசயனன் உட்பட பலர் செய்திருந்தனர்.