பூப்பல்லக்கில் பரமக்குடி கள்ளழகர்
ADDED :2399 days ago
பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்., 14 ல் காப்புக்கட்டுதலுடன் துவங்கிய நிலையில் நேற்று முன்தினம் பாலாபிஷேகத்துடன் விழா நிறைவடைந்தது.
கோயிலில் ஏப்.,19 அதிகாலை பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர், மறுநாள் குதிரை வாகனத்திலும், தொடர்ந்து சஷே, கருட வாகனத்திலும், ராஜாங்க திருக்கோலத்தில் பட்டுப்பல்லக்கிலும் பவனி வந்தார். மேலும் ஏப்.,23ல் பூப்பல்லக்கில் பவனி வந்த பெருமாள் மாலை 6:30 மணிக்கு திருக்கோயிலை அடைந்தார். மறுநாள் உற்சவசாந்தியும், இரவு பெருமாளுக்கு கசாயம் வைத்து நெய்வேய்த்தியம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் காலை பாலாபிஷேகமும், இரவு பெருமாள் கண்டாங்கி பட்டுடித்தி விடிய, விடிய வீதிவலம் வந்தார். தொடர்ந்து நேற்று காலை கோயிலில் சேர்க்கையாகினார். இதையடுத்து விழா நிறைவடைந்தது.