கரியமாணிக்க பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ஊத்துக்கோட்டை : கரியமாணிக்க பெருமாள் கோவிலில், நேற்று, கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம் கிராமத்தில், கமலவல்லி நாயிகா சமேத கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளது.பழமை வாய்ந்த இக்கோவில், பக்தர்கள் பங்களிப்புடன் சீரமைக்கும் பணி நடந்து முடிந்தது. கடந்த, 24ம் தேதி மாலை, 5:00 மணிக்கு அனுக்ஞை, வாஸ்து ஹோமம், கலாகர்ஷணம், யாகசாலை உள்ளிட்டவை நடந்தன. கும்பாபிஷேகத்தின் இரண்டாம் நாளான நேற்று முன்தினம், காலை, 7:00 மணிக்கு, மகாசாந்தி கும்ப அய்யம், பூர்ணாஹூதி, அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தன. நேற்று காலை, 6:00 மணிக்கு விஸ்வரூபம், யாகசாலை முடிந்து, கும்பாபிஷேகம் நடந்தது. வேத மந்திரங்கள் முழங்க, கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசனம் செய்தனர்.மாலை, 3:00 மணிக்கு, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு, 7:00 மணிக்கு உற்சவர் திருவீதியுலாவும் நடைபெற்றது.