திண்டுக்கல்லில் பாஸ்கு திருவிழா தேர்பவனி
ADDED :2714 days ago
திண்டுக்கல்: மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை கோயிலின் பாஸ்கு திருவிழாவையொட்டி தேர்பவனி நடந்தது.
பாஸ்கு திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலி, ஆராதனைகள் நடந்தது.
இயேசுவின் அற்புதங்கள் மற்றும் சிலுவைப்பாடு காட்சிகள் நடித்து காண்பிக்கப்பட்டன. நேற்று (ஏப்., 28ல்) முக்கிய வீதிகள் வழியே உயிர்தத ஆண்டவர், குழந்தை இயேசு, வியாகுலமாதாவின் தேர்ப்பவனி நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.