உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் கூடுதல் வசதி எதிர்பார்ப்பில் பக்தர்கள்

சதுரகிரியில் கூடுதல் வசதி எதிர்பார்ப்பில் பக்தர்கள்

வத்திராயிருப்பு : சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைகோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூடுதல் குடிநீர் வசதி செய்து தர பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு ஒவ்வொரு தமிழ் மாதமும் பவுர்ணமி மற்றும் அமாவாசையை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கபடுவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை விடபட்டுள்ளதால் மே-2 முதல் கோயிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள்.தற்போது அதிகரித்து வரும் வெயிலால், சதுரகிரி மலைப்பகுதிகளில் போதிய குடிநீர் வசதிகள் இல்லை. இதனால் கோயிலுக்கு வரும், பக்தர்களுக்கு கூடுதல் குடிநீர் வசதி செய்து தர அரசுத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !