கிருஷ்ணகிரி ராமபக்த வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2401 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றின் கரையில் உள்ள, ராமபக்த வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
இதில், புதிதாக அமைக்கப்பட்ட பஞ்சமுக ஆஞ்சநேய கற்சிலைகளுக்கும், 26 அடி உயரமுள்ள பஞ்சமுக ஆஞ்நேயர், விநாயகர், சொர்ணாம்பிகா சமேத சொர்ணகர்சன பைரவருக்கும், சீரடி சாய்பாபாவுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று (ஏப்., 29ல்)காலை, 6:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், 10:15 மணிக்கு கோபுரங்கள் மற்றும் பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலைக்கு, மஹா கும்பாபிஷேகமும் நடந்தது.
தொடர்ந்து, விநாயகர், ராமபக்த வீர ஆஞ்சநேயர், சொர்ணகர்சன பைரவர், சீரடி சாய்பாபா ஆகிய சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி யில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.