உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்தசுவாமி கோவில் உண்டியலில் ரூ.49.38 லட்சம் வசூல்

திருப்போரூர் கந்தசுவாமி கோவில் உண்டியலில் ரூ.49.38 லட்சம் வசூல்

 திருப்போரூர் : திருப்போரூர் கந்தசுவாமி கோவில் உண்டியல்களில், 49.38 லட்சம் ரூபாய், பக்தர்களின் காணிக்கையாக கிடைத்துள்ளது.திருப்போரூர் கந்த சுவாமி கோவிலில், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, உண்டியல் காணிக்கைகள் எண்ணப்படுவது  வழக்கம்.அதன்படி நேற்று, கோவிலில் உள்ள, 12 உண்டியல்களில், ஏழு உண்டியல்கள், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உதவி ஆணையர், தியாகராஜன், கோவில் செயல் அலுவலர் சக்திவேல் தலைமையில் திறக்கப்பட்டன.அதில், பக்தர்கள் காணிக்கையாக  செலுத்திய, 48.38 லட்சம் ரூபாய், 390 கிராம் தங்கம், 5,060 கிராம் வெள்ளி கிடைத்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !