உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போடிபட்டி தன்னாசியப்பன் கோயிலில் வரும் 8ல் கும்பாபிஷேகம்

போடிபட்டி தன்னாசியப்பன் கோயிலில் வரும் 8ல் கும்பாபிஷேகம்

உடுமலை: போடிபட்டி தன்னாசியப்பன் கோயிலில், வரும் 8ம் தேதி, கும்பாபிஷேகம் நடக்கிறது.

உடுமலை ஒன்றியம் போடிபட்டி காமராஜ் நகரில் லட்சியம்மன், வேட்டைக்கார சுவாமி சன்னதிகளைக் கொண்ட தன்னாசியப்பன் கோயில் உள்ளது.

இக்கோயில் கும்பாபிஷேக விழா, வரும் 7ம் தேதி மாலை 6:00 மணிக்கு, விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம் மற்றும் யாக சாலை பிரவேசத்துடன் துவங்குகிறது.

அன்று இரவு 8:00 மணிக்கு முதல்கால யாக வேள்வி, தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, 8ம் தேதி தேவராம், திருவாசக பாராயணம், வேத பாராயணம், காலை 7:30 மணிக்கு மும்மூர்த்தி களுக்கு தீர்த்தம் விடுதல், 8:30 மணிக்கு கும்பாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !