ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தெப்பத் திருவிழா!
ADDED :4992 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், மாசி மகத்தையொட்டி, நேற்று தெப்பத் திருவிழா நடந்தது. விழாவையொட்டி சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. நேற்று இரவு திருமுக்குளத்தில் நடந்த தெப்பத் தேரில் ஆண்டாள், ரெங்கமன்னார், எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடந்தன. பின், தெப்ப தேரோட்டம் நடந்தது. விழாவில், தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் குருநாதன், ஸ்தானிகம் ரமேஷ், சுதர்சனன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.