உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்கோட்டையில் ஜாத்திரை கோலாகலம்

ஊத்துக்கோட்டையில் ஜாத்திரை கோலாகலம்

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டையில் நடந்த ஜாத்திரையில், பக்தர்கள், படையல் போட்டு மாரியம்மனை வழிபட்டனர். மாரியம்மனுக்கு ஜாத்திரை விழா நடத்துவது, ஒவ்வொரு கிராமத்திலும் நடைபெறும் வழக்கம்.

ஊத்துக்கோட்டையில் இவ்விழா நடந்தது. கடந்த, 28ம் தேதி மதியம், ஏரிக்கரையில் உள்ள கிராம தேவதை செல்லியம்மனுக்கு, கிராம பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். கரகம் எடுத்து வந்து, கோவிலை மூன்று முறை வலம் வந்து, ஜாத்திரை விழாவிற்கான காப்பு
கட்டப்பட்டது.மாலை, 6:00 மணிக்கு, பூந்தோப்பு பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், ரெட்டித் தெருவில் உள்ள எல்லையம்மன் கோவில்களில், பக்தர்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.

பின், 29, 30 மற்றும் மே, 1ம் தேதி காலை வேளையில், கரகம் எடுத்து ஊர் சுற்றி வரப்பட்டது. நேற்று முன்தினம் (மே., 1ல்) இரவு, உற்சவர் மாரியம்மன், குயவர் வீட்டில் இருந்து, ஆனந்தமாக சலவை தொழிலாளர்கள் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டார்.அங்கு சிறப்பு பூஜை செய்து, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு, தங்களது வேண்டுதல் களை நிறைவேற்றினர்.இறுதி நாளான நேற்று (மே., 2ல்) மாலை, கிராம பெண்கள் விளக்கேந்தி சென்று மாரியம்மனை வழிபட்டனர். பக்தர்கள் வேப்ப இலை ஆடை அணிந்து, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !