உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை பெரியகோவிலில் வருணபகவானுக்கு சிறப்பு யாகம்

தஞ்சை பெரியகோவிலில் வருணபகவானுக்கு சிறப்பு யாகம்

தஞ்சாவூர், தஞ்சை பெரியகோவிலில் உள்ள வருணபகவானுக்கு மழை வேண்டி சிறப்பு யாகம் செய்யப்பட்டன.

இந்துசமய அறநிலையத் துறைக்குட்பட்ட அனைத்து முக்கியமான கோவில்களிலும் மழைவேண்டி யாகம் நடத்தும்படி துறை ஆணையர் பனீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று காலை தஞ்சை பெரியகோவிலில் மேற்கு புற திருச்சுற்றில் அமைந்துள்ளது வருணபாகவன் சன்னதியில், கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு, யாகம் வளர்க்கப்பட்டது. சிவச்சார்யார்கள், வேத மந்திர பாராயணம் மற்றும் வருண காயத்ரி மந்திர பாராயணம் முழங்கினர். முன்னதாக வருணபகாவனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தானம் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடந்து. தொடர்ந்து மஹா பூர்ணாஹூதி நிறைவு பெற்று, கலச புனித நீரால், வருணபகாவனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபராதனை காண்பிக்கப்பட்டன.நிகழ்ச்சியில், மழையை வரவழைக்கும் விதமாக, தவில், நாதஸ்வரம், வயலின் உள்ளிட்ட வாத்திய கருவிகளில், மேகவர்ஷினி, அமிர்தவர்ஷினி, கோதாரி ஆனந்த பைரவி, ரூப கல்யாணி போன்ற ராகங்களும் வாசிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !