உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகாசி பத்திரகாளியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் திருவிழா

சிவகாசி பத்திரகாளியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் திருவிழா

சிவகாசி:சிவகாசி ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் விழாவில் பக்தர்கள் பொங்கல் வைத்தும்,, கயறு குத்து என நேர்த்தி கடன் செலுத்தி வழிபட்டனர்.

இக்கோயில் விழா கடந்த 31ல் துவங்கியது. 11 நாட்கள் நடக்கும் விழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று (மே., 8ல்) அக்னிசட்டி, கயர்குத்து, முடிகாணிக்கை, முத்து காணிக்கை, மாவிளக்கு, தவழும் பிள்ளை காணிக்கை என நேர்த்திகடன் செலுத்தி அம்மனை தரிசித்தனர். அம்மனுக்கு பொங்கல் வைத்தும் சிறப்பு வழிபாடு செய்தனர். 10ம் நாளான இன்று
(மே., 9ல்) தேர் வடம்

தொடுதல் நிகழ்ச்சி, நாளை (மே., 10ல்) தேரோட்டம் நடைபெற உள்ளது. நேற்று (மே., 8ல்) நடந்த பொங்கலையொட்டி சிவகாசியில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. பட்டாசு, தீப்பெட்டி, அச்சு உள்ளிட்ட அனைத்து ஆலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. சிவகாசி, திருத்தங்கல் மட்டுமல்லாது சுற்றுகிராமத்தினரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !