கூடலூர், முத்துமாரியம்மன்கோவில் கும்பாபிஷேகம் திருவிழா
கூடலூர்: கூடலூர், புளியாம்பாறை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திருவிழா, நேற்று முன்தினம் (மே., 7ல்) மங்கள இசையுடன் துவங்கியது. தொடர்ந்து, கணபதி ஹோமம், காப்பு கட்டுதல், கங்கையிலிருந்து புனிதநீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தன.
மாலை, 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, முளைப்பாறி அழைப்பு; 6:00 மணிக்கு யாகசாலை பிரவேசம், கலசம் கும்பம் ஸ்தாபனம், திருவிளக்கு ஏற்றுதல், வழிபாடு, யாகவேள்வி தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு, 10:00 மணி முதல் கலச அர்ச்சனை, யாக ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று (மே., 7ல்), காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம், சக்தி ஹோமம், சகல தேவதா ஹோமம், தைலாபிஷேகம், சுவாமிகளுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. காலை, 6:00 மணிக்கு யாகஹோமம் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் பாடும் நிகழ்ச்சிகள் நடந்தன. காலை, 9:15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.