உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சத்திரம் குபேரமூர்த்தி கோவிலில் சிறப்பு ஹோமம்

புதுச்சத்திரம் குபேரமூர்த்தி கோவிலில் சிறப்பு ஹோமம்

புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை குபேரமூர்த்தி கோவிலில் அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடந்தது.

புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளை குபேரமூர்த்தி கோவிலில் அட்சய திருதியை முன்னிட்டு, குடும்பத்தில் செல்வம் செழிக்கவும், இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், நேற்று முன்தினம் (மே., 7ல்) சிறப்பு ஹோமம் நடந்தது.இரவு 8.30 மணிக்கு பால், சந்தனம், பன்னீர், தேன் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து, இரவு 9.00 மணிக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !