உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் மழைக்காக சிறப்பு யாகம்

பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் மழைக்காக சிறப்பு யாகம்

பழநி:பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் மழைவேண்டி சிறப்பு யாகபூஜையுடன் வருண ஜபம் நடந்தது.இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்து முக்கியமான கோயில் களிலும் மழைவேண்டி யாகம் நடத்தும்படி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பழநியில் கிழக்குரத வீதி பெரியநாயகியம்மன் கோயிலில் மழைவேண்டி சிறப்பு யாகம், வருண ஜப வழிபாடு நடந்தது. நந்தியை சுற்றி தொட்டியில் தண்ணீர் நிரப்பியும், சிவாச்சாரியர்கள் தண்ணீர் தொட்டியில் அமர்ந்தும் மழைவேண்டி தேவாரம் மழைப்பதிக பாடல்கள் பாடினர். ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணைஆணையர் (பொ) செந்தில்குமார் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !