தேவகோட்டை சங்கர ஜெயந்தி விழா
ADDED :2338 days ago
தேவகோட்டை:தேவகோட்டை ஆதிசங்கரர் கோவிலில் 106 ம் ஆண்டு சங்கர ஜெயந்தி விழா மூன்று நாட்கள்நடந்தது. கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. ஆதிசங்கரர், சாரதாம்பாள், காமாட்சியம்மன் படங்கள் வீதி உலா நடந்தன. பாராயணம் பத்மநாபனின் சங்கர விஜயம் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.
தினமும் காலை,மாலையில் சதுர்வேதம், மகாதீபராதனை நடந்தது. தலைமையாசிரியர் சீனிவாசன்அழகு தரிசனம், குருவே சரணம் என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவுகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை சங்கர ஜெயந்தி மேஹாத்சவ கமிட்டி சார்பில்ராமசாமி துரை செய்திருந்தார்.