புதுச்சேரி சிவனடியார் கூட்டமைப்பு திருவாசகம்முற்றோதல்
ADDED :2387 days ago
புதுச்சேரி: புதுச்சேரி நம்பெருமான் மாணிக்கவாசகர் சிவனடியார் திருக்கூட்ட அமைப்பு சார்பில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி வெள்ளந்தாங்கி அய்யனார் கோவிலில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நேற்று (மே., 13ல்) காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.
கலியபெருமாள், சிவபெருமானின் திருவாசகம் சம்பந்தமாக பாடல்களை பாடிக்கொண்டு, அதிலுள்ள பொருளின் அர்த்தங்களை கூறினார். நிகழ்ச்சியில், பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நம்பெருமான் மாணிக்கவாசகர் சிவனடியார் திருக்கூட்ட அமைப்பு மற்றும் ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.