ராசிபுரம் ஆர். புதுப்பாளையத்தில் காளியம்மன் பண்டிகை விழா கோலாகலம்
ADDED :2338 days ago
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த, ஆர்.புதுப்பாளையத்தில் சந்துகாளியம்மன் கோவில் பண்டிகை நடந்தது.
ராசிபுரம் அடுத்த, ஆர். புதுப்பாளையத்தில் சித்திரை இறுதி வாரத்தில் சந்து காளியம்மன் பண்டிகை நடப்பது வழக்கம். அதேபோல், நேற்று (மே., 13ல்) விழா தொடங்கியது. பெண்கள் பொங்கல் வைத்து, சுவாமிக்கு வழிபாடு செய்தனர். பெண்கள் புனித நீருடன் ஊர்வலம் வந்தனர். சுவாமிக்கு மகிஷாசூரவர்த்தினி அலங்காரம் செய்திருந்தனர்.