உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்த வாரம் என்ன?

இந்த வாரம் என்ன?

* மே 11 சித்திரை 28: சிவஞான முனிவர் குருபூஜை, மதுரை கூடலழகர் உற்ஸவம், மயிலாடுதுறை கவுரிமாயூரநாதர் கற்பக விருட்ச வாகனம், நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி சிம்ம வாகனம், வீரபாண்டி கவுமாரியம்மன் தேர்.

* மே 12 சித்திரை 29: காளையார்கோவில் அம்மன் தபசு காட்சி, பழனி முருகன் புதுச்சேரி சப்பரம், திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் ராமவதாரக் காட்சி, வீரபாண்டி கவுமாரியம்மன் ரத வீதியில் பவனி.

மே 13 சித்திரை 30: ஆழ்வார் திருநகரி 9 கருட சேவை, திருப்பாப்புலியூர் சிவன் நந்தி வாகனம், கன்னிகா பரமேஸ்வரி பூஜை. திருப்புத்தூர், காளையார்கோவில் சிவன் திருக்கல்யாணம், மதுரை கூடலழகர் அனுமார் வாகனம், வீரபாண்டி கவுமாரியம்மன்  தேர் தடம் பார்த்தல்.

* மே 14 சித்திரை 31:  ஸ்ரீவாசவி ஜெயந்தி, மதுரை கூடலழகர் கருட வாகனம், காரைக்குடி கொப்புடைய நாயகி வெள்ளி சிம்மாசனம், சிறுவயல் பொன்னழகியம்மன் ஆராதனை, வீரபாண்டி கவுமாரி பொங்கல், தேனி குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு, காளையார்கோவில் சிவன் சமணரை கழுவேற்றல், திருக்கண்ணபுரம் சவுரிராஜர் காளிங்க நர்த்தனம்.

* மே 15 வைகாசி 1:  ஏகாதசி விரதம், திருப்பாப்புலியூர் சிவன் கைலாச வாகனம், காளையார்கோவில் சிவன் பொய்ப்பிள்ளையை மெய்ப்பிள்ளையாக்குதல், உத்தமர் கோவில் சிவன் திருக்கல்யாணம், வீரபாண்டி கவுமாரியம்மன் விடையாற்று உற்ஸவம், காஞ்சி குமரகோட்டம் முருகன் தேர்.

* மே 16 வைகாசி 2: முகூர்த்த நாள், பிரதோஷம், பரசுராம துவாதசி, ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் தவழும் கண்ணன் கோலம், பழனி முருகன் ஆட்டுக்கிடா வாகனம், காட்டுபரூர் ஆதிகேசவர் திருக்கல்யாணம், காரைக்குடி கொப்புடைய நாயகி அன்ன வாகனம், நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி பல்லக்கு.

* மே 17 சித்திரை 3:  முகூர்த்த நாள், நரசிம்ம ஜெயந்தி, மயிலாடுதுறை, திருவாடானை, நயினார் கோயில், திருப்புத்தூர், உத்தமர் கோயில் திருப்புகலூர், காளையார்கோவில் சிவன் தேரோட்டம், பழனி முருகன் திருக்கல்யாணம், திருக்கண்ணபுரம் சவுரிராஜர் வெண்ணெய்த்தாழி சேவை, ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கோ ரதம், இரவு புஷ்பப்பல்லக்கு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !