உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை முடி காணிக்கை வருமானம் ரூ.1.25 கோடி

திருமலை முடி காணிக்கை வருமானம் ரூ.1.25 கோடி

திருப்பதி, திருமலை ஏழுமலையான் கோவிலின், முடி காணிக்கை வருமானம், 1.25 கோடி ரூபாய் என, தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஆந்திர மாநிலம்,திருப்பதி, திருமலைக்கு வரும் பக்தர்கள்,ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பிக்கும் தலைமுடியை, தேவஸ்தான நிர்வாகம், ரகம் வாரியாக தரம்பிரித்து, இணையதள ஏலம் மூலம் விற்று வருகிறது.இந்த ஏலம், மாதந்தோறும், முதல் மற்றும் மூன்றாவது வியாழக்கிழமைகளில் நடக்கிறது.அதன்படி, நேற்று மாலை நடந்த ஏலத்தில், 600 கிலோ தலைமுடி விற்பனையானதில், தேவஸ்தானத்திற்கு, 1.25 கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !