உடுமலை காமாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :2488 days ago
உடுமலை:உடுமலை, விஸ்வகர்ம காமாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று (மே., 17ல்) நடந்தது.
உடுமலை, காமாட்சி அம்மன் கோவில் வீதியில், ஏகாம்பரேஸ்வரர் சமேத காமாட்சி
அம்மன் கோவில் உள்ளது. கோவிலில் அம்மன் திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, நேற்று (மே., 17ல்) காலை, 10:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் துவங்கின.காமாட்சி அம்மன் பச்சை பட்டுடுத்தி, சிறப்பு அலங்காரத்திலும் ஏகாம்பரேஸ்வர சுவாமிகள் பட்டுத்துணி உடுத்தியும், திருமண உற்சவத்துக்கு தயாராகினர்.
வேதங்கள் பாட, ஏகாம்பரேஸ்வரர், விஸ்வகர்ம காமாட்சி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.பக்தர்கள், பரவசத்துடன் வழிபட்டனர். திருமண கோலத்தில் சுவாமிகள் பக்தர் களுக்கு அருள்பாலித்தனர். உற்சவத்தை தொடர்ந்து, பக்தர்களுக்கு, மங்கலப்பொருட்கள் வழங்கப்பட்டன.