நத்தம் கோபால்பட்டியில் காளியம்மன் கோயில் விழா
நத்தம்: நத்தம் அருகே கோபால்பட்டியில் காளியம்மன் கோயில் விழா நடந்து வருகிறது. கடந்த மே 14 அன்று கும்பம் வைத்து சாமி சாட்டுதலுடன் விழா துவங்கியது. மே 16 அன்று மாலை அம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை நடந்தது. மறுநாள் மாலை பெண்கள் பரம்பரிய கூடைகளுடன் சென்று மங்கம்பட்டி விநாயகருக்கு பொங்கல் வைத்து அபிஷேக ஆராதனை நடந்தது.இன்று (மே., 21ல்) இரவு கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்து, அம்மனுக்கு அழங்காரம், அபிஷேகம் நடக்கிறது.
தொடர்ந்து கரகாட்டம், நையாண்டி மேளம், வான வேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. நாளை (மே., 22ல்) அதிகாலையில் அம்மன் எழுந்தருளி வாண வேடிக்கை, மேளதாளம் முழங்க கோயிலை அடைவார். தொடர்ந்து மாவிளக்கு எடுத்தல், அக்னிச்சட்டி எடுத்தல், கிடா வெட்டி பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடக்க உள்ளது. நாளை மறுநாள் (மே., 23ல்) அபிஷேகத்தை தொடர்நது மஞ்சள் நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலை செல்வதுடன் விழா நிறைவு பெறும்.