காஞ்சிபுரம் வரதர் கோவிலில் தேரோட்டம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், வைகாசி பிரம்மோற்சவத்தின் பிரபல உற்சவமான, தேரோட்டம், இன்று (மே., 23ல்) நடைபெறுகிறது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோற்சவம், 17ல் கொடியேற்றத் துடன் துவங்கியது.
இதில், ஏழாம் நாள், பிரபல உற்சவமான தேரோட்டம், இன்று (மே., 23ல்) நடைபெறுகிறது. அதிகாலை, 5:15 மணிக்கு உபய நாச்சியாருடன் வரதராஜ பெருமாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள்கிறார்.பல்வேறு பூஜைகளுக்கு பின், காலை, 6:00 மணிக்கு, பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் துவங்க உள்ளது. விழாவையொட்டி, இரவு, பகலாக தேர் அலங்கார பணிகள் தீவிரமாக நடக்கின்றன.தேர் திருவிழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் நகருக்கு வரும் பஸ்கள், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.தாம்பரம், செங்கல் பட்டு பஸ்கள் முத்தியால்பேட்டை வழியாக வையாவூர் சென்று, பஸ் நிலையம் செல்லும். உத்திரமேரூர் பஸ்கள், ஓரிக்கையுடன் நிறுத்தப்படுகின்றன.வந்தவாசி, திருவண்ணாமலை, ஆரணி பகுதி பஸ்கள், செவிலிமேட்டில் நிறுத்தப்படுவதாக, போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.உற்சவத்தை காண வரும் பக்தர்களுக்கு, காஞ்சிபுரம், லாரி சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள், 52வது ஆண்டாக, கூழ் ஊற்றுக்கின்றனர்.