வில்லியனூர் கரசூர் மாரியம்மன் கோவில் சுவாமி வீதியுலா
ADDED :2376 days ago
வில்லியனூர்:கரசூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் சுவாமி வீதியுலா நடந்தது.சேதராப்பட்டு அடுத்த கரசூர் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 17ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து நடந்துவரும் விழாவில் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும், இரவுஅலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலாவும் நடைபெற்று வருகிறது.முக்கிய விழாவாக 20ம் தேதி சக்தி கரகம் மற்றும் சுவாமி வீதியுலா நடந்தது. 21ம் தேதி சாகை வார்த்தல், பிடாரி அம்மனுக்கு ஊரணி பொங்கல், மாரியம்மனுக்கு கும்பம் கொட்டுதல் நடந்தது. நேற்று (மே., 22ல்) மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.