உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளித்தலை மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் பால்குட ஊர்வலம்

குளித்தலை மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் பால்குட ஊர்வலம்

குளித்தலை: மேட்டுமருதூர் பகவதியம்மன்கோவில், கணக்கப் பிள்ளையூர், மேல் நங்கவரம், நெய்தலூர் கோட்டமேடு மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் பால்
குட ஊர்வல நிகழ்ச்சி நடந்தது. குளித்தலை அடுத்த, மேட்டு மருதூர் பகவதியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மருதூர் காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் பால் குடம், தீர்த்த
குடம் எடுத்து வந்தனர். செல்லாண்டியம்மன், அங்காளம்மன், மாரியம்மன் கோவிலைச் சுற்றி வந்து, சிறப்பு பூஜை நடந்தது.

கல்லுப்பாலத்தில், இரவு கரகம் பாலித்து, வீடுகளில் பூஜை நடந்தது. இன்று (மே., 27ல்) காலை பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், மதியம் சுவாமிக்கு சந்தனக் காப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாரதனை நடக்கிறது. நாளை (மே., 28ல்) மாலை, மாவிளக்கு ஊர்வலம்,
எருமை கிடா பலியிடுதல், கரகம் ஆற்றில் விடுதல் நடக்கிறது.

இதேபோல், கணக்கப்பிள்ளையூர் காலனி மாரியம்மன்கோவில் திருவிழாவை முன்னிட்டு, அப்பகுதி மக்கள், குளித்தலை கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து பால் குடம், தீர்த்த
குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். நெய்தலூர் கோட்டைமேடு மாரியம்மன் கோவில், மேல் நங்கவரம் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக, பெருகமணி காவிரி ஆற்றில் இருந்து,
பக்தர்கள் தீர்த்தகுடம் எடுத்து வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !