உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் திருநள்ளார் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

காரைக்கால் திருநள்ளார் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று (மே., 30ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது.அதனையொட்டி கடந்த 25ம் தேதி விக்னேஸ்வர பூஜை, மகாகணபதி ஹோமம், 28ம் தேதி அங்குரார்ப்பணம் நடந்தது. நேற்று (மே., 30ல்) தர்பாரண் யேஸ்வரர், அம்பாள் மற்றும் சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை 6.30 மணிக்கு ரிஷப கொடியேற்றமும், பஞ்சமூர்த்தி வீதி உலா நடந்தது.இன்று 31 முதல் 1ம் தேதி வரை விநாயகர் உற்சவமும், 2 மற்றும் 3ம் தேதிகளில் சுப்ரமணிய சுவாமி உற்சவமும், 5ம் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடக்கிறது.

வரும் 6ம் தேதி செண்பக தியாகராஜர் வசந்த மண்டபம் எழுந்தருளுதலும், 8ம் தேதி பூத வாகனத்திலும், வரும் 9ம் தேதி யானை வாகனத்திலும், 10ம் தேதி பஞ்சமூர்த்திகள் தங்கரிஷப
வாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது.வரும் 11ம் தேதி தேர் திருவிழாவும், 13ம் தேதி சனீஸ்வர பகவான் தங்க காக்கை வாகனத்தில் வீதியுலா, 14ம் தேதி தெப்பல் உற்சவம்,16ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.விழா ஏற்பாடுகள் கலெக்டர் விக்ராந்தராஜா மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி சுந்தர் ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !