உறங்கும் முன் ராமநாமம் ஜபிப்பதால் கனவுத் தொல்லை வராதாமே? உண்மையா?
ADDED :5069 days ago
நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே என்கிறார் சுந்தரர். துஞ்சலும் துஞ்சலில்லாத போதும் என்கிறார் ஞான சம்பந்தர். நாம் மறந்திருந்தாலும், தூங்கும் போதும் கூட இறைவனுடைய திருநாமத்தை நமது நாக்கு உச்சரித்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்பது அவர் தம் கருத்து. இப்படிச் செய்தால் கனவுத்தொல்லை மட்டுமல்ல. எந்தத் தொல்லையுமே வராது.