/
கோயில்கள் செய்திகள் / மோட்ச தீபம் என்றால் என்ன? அதை எந்தக் கோயிலில் எப்பொழுது எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்?
மோட்ச தீபம் என்றால் என்ன? அதை எந்தக் கோயிலில் எப்பொழுது எத்தனை தீபம் ஏற்ற வேண்டும்?
ADDED :5067 days ago
மோட்சம் என்றால் விடுதலை. இவ்வுடலிலிருந்து உயிர் விடுதலை பெற்று இறைவனடி சேர்வதை மோட்சம் என்பார்கள். வானுலகம் செல்லும் உயிருக்கு நல்ல கதி கிடைப்பதற்காக இறைவனுக்கு ஏற்றப்படும் தீபமே மோட்ச தீபம். சிவன் கோயில் பெருமாள் கோயில்களில் கோபுர உச்சியில் மாலைப் பொழுதில் ஏற்றுவது வழக்கம். மூன்று ஐந்து என்ற எண்ணிக்கையில் ஏற்றலாம்.