சிதம்பரத்தில் மூலவர் மீது சூரிய ஒளி: பக்தர்கள் பரவசம்!
ADDED :4966 days ago
சிதம்பரம் : சிதம்பரம் அருகே பழமை வாய்ந்த ஈஸ்வரன் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி படும் நிகழ்வை பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பின்னத்தூர் கிராமத்தில் ராமநாத ஈஸ்வரன் கோவில் உள்ளது. மிக பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் மூலவர் மீது சூரிய ஒளி நேரடியாக படும் நிகழ்வு நடைபெறும். இந்த ஆண்டும் 3 நாள் மூலவர் மீது சூரிய ஒளி படும் நிகழ்வு நடக்கிறது. முதன் நாளான நேற்று மூலவர் மீது சூரிய ஒளி பட்டு மூலவர் மின்னும் காட்சி பக்தர்களை பரவசமடைய செய்தது. நேற்று மூலவர் மீது மாலை 6 மணிக்கு சூரிய ஒளிபட்டது. அப்போது பக்தர்கள் தீபாராதனை செய்து வழிப்பட்டனர்.