உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண்டுகாளியம்மன் கோயில் பூக்குழி விழா

மண்டுகாளியம்மன் கோயில் பூக்குழி விழா

பழநி: பழநி அருகே வேலுார் மண்டு காளியம்மன், உச்சிகாளியம்மன் கோயில் பூக்குண்டம் திருவிழாவில் 2,500 பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

பழநி நெய்க்காரப்பட்டி பேரூராட்சி வேலுார் மண்டுகாளியம்மன் கோயில், உச்சிகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பூக்குண்டம் இறங்கும் விழா நடக்கிறது. இவ்வாண்டும் சண்முகாநதி, ராமேஸ்வரம், பொள்ளாச்சி மாசானியம்மன்கோயில் பகுதிகளில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். அம்மனுக்கு அபிஷேகம் செய்து, அலங்காரம்மற்றும் தீபாராதனை நடந்தது.நேற்று அதிகாலை 2,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர். மாவிளக்கு, அக்னிச் சட்டி, பால்குடங்கள், அலகு குத்தி, நெய்க்காரப்பட்டி, ஆர்.வாடிப்பட்டி, அ.கலையம்புத்துார், பாப்பம்பட்டி, சின்னகலையம்புத்துார் பகுதி சுற்றுவட்டார கிராம பக்தர்கள் திரளாக வந்த அம்மனை வழிபட் டனர். டி. எஸ்.பி., விவேகானந்தன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !