உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் ஜூன் 16 முதல் 19 வரை அன்னாபிஷேகம்

பழநியில் ஜூன் 16 முதல் 19 வரை அன்னாபிஷேகம்

பழநி: பழநி முருகன் கோயில் மற்றும் அதன் உபகோயில்களில் ஜூன் 16 முதல் 19 வரை, உலக நலன் வேண்டி யாகபூஜை மற்றும் அன்னாபிஷேகம் நடக்க உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பழநி முருகன் கோயில், உபகோயில்களில் ஆனி பவுர்ணமிக்கு முதல் நாள் துவங்கி, தொடர்ந்து 4 நாட்கள் அன்னாபிஷேகம் நடக்கிறது. இந்தாண்டு ஆனிமாத பிறப்பு நாளில் (ஜூன் 16) பழநி மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பப்பட்டு, யாக பூஜையுடன் உச்சிக் காலத்தில் மூலவருக்கு சங்காபிஷேகம் செய்து, அன்னாபிஷேகம் நடைபெறும். ஜூன் 17ல் பவுர்ணமி அன்று திருஆவினன்குடி கோயிலில் சாயரட்சை பூஜையில் அன்னாபிஷேகம் நடக்கிறது. ஜூன் 18ல் பெரியநாயகியம்மன் கோயிலும், ஜூன் 19ல் கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலிலும் அன்னாபிஷேகம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ) செந்தில்குமார் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !