உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலுார் ராஜகோபால சுவாமி கோவிலில் பாலாலயம்

கடலுார் ராஜகோபால சுவாமி கோவிலில் பாலாலயம்

கடலுார: கடலுார் ராஜகோபால சுவாமி கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலயம் இன்று நடக்கிறது. கடலுார், புதுப்பாளையம், செங்கமலத் தாயார் சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் ஜி.ஆர்.கே.எஸ்டேட் நிர்வாக இயக்குனர் துரைராஜ், கோமதி துரைராஜ் உபயத்தில் ராஜகோபுரம் கட்டி டிக்கப்பட்டுள்ளது.

கோவில் மற்றும் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, இதனை முன்னிட்டு கோவில் பாலாலயம் செய்ய, யாகசாலை பூஜை நேற்று மாலை துவங்கியது. யாக சாலை பூஜையில் 15 குண்டங்கள் அமைக்கப்பட்டு 25க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் பூஜை செய்கின்றனர். இன்று இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் முடிந்து, மாலை அனைத்து சன்னதிகளுக்கும் பாலாலயம் செய்யப்படுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை உபயதாரர் ஜி.ஆர்.கே.எஸ்டேட் நிர்வாக இயக்குனர் துரைராஜ் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !