உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) எதிர்பாராத வருமானம்

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) எதிர்பாராத வருமானம்

இந்த மாதம் சுக்கிரன், புதன் நன்மை தருவார்கள். குரு தற்போது 9-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம். அவரால் மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். செயலில் உற்சாகம் பிறக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். அக்கம் பக்கத்தினர் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்களின் மேன்மை அறிந்து சரணடையும் நிலை வரலாம். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. இவை அனைத்தும் குருவால் கிடைக்கும் நற்பலன்கள். இது தவிர குருவின் 9-ம் இடத்துப்பார்வையும் சிறப்பாக உள்ளதால் அதன் மூலமும் நற்பலன் கிடைக்கும். முயற்சியில் தடைகள் வந்தாலும் அதை முறியடிப்பீர்கள். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும்.

கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதியர் சுக்கிரனால் ஒன்று சேருவர். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஜூன்29க்கு பிறகு சமூக மதிப்பு அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் சுமுகநிலை உருவாகும். ஜூன் 20,21ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் ஜூலை2,3ல் அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். ஜூன்25,26ல் பெண்களால் நன்மையை எதிர்பார்க்கலாம்.

பணியாளர்கள் புதன், குருவால் சிறப்பான முன்னேற்றம் காண்பர். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். உங்கள் திறமைக்கு ஏற்ப வருமானம் உயரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் வந்து சேரும். ஜூன்18,19, ஜூலை15,16ல் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு பெண்கள் வகையில் தொல்லைகள் குறுக்கிடலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.

கூட்டாளிகளிடையே ஒற்றுமை மேம்படும். சுக்கிரனின் பலத்தால் ஆதாயம் அதிகரிக்கும். வாடிக்கையாளர் மத்தியில் அனுகூலமான போக்கு காணப்படும். புதிய தொழில் முயற்சி வெற்றி தரும். விரிவாக்கத்திற்காக வங்கி கடன் எளிதாக கிடைக்கும். ஜூன் 22,23,24,27,28,29ல் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். ஜூலை 6,7ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.   

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்க வாய்ப்புண்டு. ரசிகர்களின் மத்தியில் செல்வாக்கு கூடும். அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். சமூகநல சேவகர்கள் எதிர்பார்த்த பலனை பெற முடியாது.

மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். கடந்த காலத்தில் இருந்த பின்தங்கிய நிலை மறையும். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். புதன் சாதகமாக காணப்படுவதால் போட்டிகளில் வெற்றி காண்பர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.

விவசாயிகளுக்கு விளைச்சல் சிறப்பாக இருக்கும். மஞ்சள், பயறு வகைகள் மூலம் அதிக மகசூல் கிடைக்கப் பெறுவர். கால்நடை வளர்ப்பின் மூலம் வருமானம் பெருகும்.

பெண்கள் குடும்பத்தாரின் அன்பை பெறுவர். அண்டை வீட்டார் அனுகூலமாக செயல்படுவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுய தொழில் புரியும் பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர். குருபகவானால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பொருளாதார வளம் பெருகும்.  கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சகோதர வழியில் உதவி கிடைக்கும். ஜூலை 8,9ல் பொன், பொருள் சேரும். உங்களால் குடும்பம் சிறப்படையும். ஜூன் 30, ஜூலை1ல் ஆடை, அணிகலன்கள் வாங்க வாய்ப்புண்டு. பெற்றோர் வீட்டில் இருந்து சீதன பொருள் வரப் பெறலாம். கேதுவால் சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்புண்டு. பயணத்தின் போது கவனம் தேவை.

* நல்ல நாள்: ஜூன் 18,19,20,21,25,26,30  ஜூலை 1,6,7,8,9,15,16
* கவன நாள்: ஜூலை10,11,12 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,5  
* நிறம்: மஞ்சள்,ஊதா

பரிகாரம்
●  செவ்வாயன்று முருகனுக்கு பாலபிஷேகம்
●  ஞாயிறன்று காலையில் சூரிய நமஸ்காரம்
●  வெள்ளிக்கிழமையில் நாகதேவதை வழிபாடு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !