திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
ADDED :2405 days ago
திருவண்ணாமலை: ஆனி மாத பவுர்ணமி திதி, நேற்று மாலை, 2:57 மணிக்கு தொடங்கி, இன்று மதியம், 2:49 மணி வரை உள்ளது.
இதனால், திருவண்ணாமலையில், நேற்று மதியம் முதல், லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ., துாரம் கிரிவலம் நடந்து சென்றனர். அப்போது, பக்தர்கள், ஓம் நமச்சிவாய, அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பியவாறு சென்றனர். மேலும், கோவிலில், ஐந்து மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டனர். கிரிவலத்தின் போது, அஷ்டலிங்கங்களையும் தரிசனம் செய்து வழிபட்டனர்.