வீரபக்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2332 days ago
திண்டிவனம்: கொள்ளார் கிராமத்தில் வீரபக்த ஆஞ்சநேயர் மற்றும் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 10ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து 12 மற்றும் 13ம் தேதிகளில் யாகசாலை பூஜைகள் நடந்தது. கும்பாபிஷேக தினமான 14ம் தேதி காலை கடம் புறப்பாடாகி 9:00 மணிக்குமேல் 10:30 மணிக்குள் வீரபக்த ஆஞ்சநேயர் மற்றும் விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு கோவில் நிர்வாகி சந்திரன் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது.விழாவில், கோவில் நிர்வாகிகள் விஜயன், விஜயபிரியா, சென்னை தனசேகர், நீலவேணி, முத்துக்குமார், மதிவதனி முன்னிலை வகித்தனர். சுப்ரமணி, இளவரசன், ராமு, லட்சுமணன், முன்னாள் நகர் மன்ற தலைவர் வெங்கடேசன், கார்த்திக், மாணிக்கம், நாராயணன் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.