சக்தி விநாயகர் கோவிலில் ஆண்டு விழா
ADDED :2326 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில், முதலாம் ஆண்டு விழா நடந்தது. பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில் கும்பாபிேஷக விழா முடிந்து, ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, கோவிலில் முதலாம் ஆண்டு விழா நேற்றுமுன்தினம் துவங்கியது. விழாவையொட்டி கணபதி ேஹாமம், முதல் கால யாக பூஜை, 108 கலசம் வழிபாடு உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை, கணபதி ேஹாமம், இரண்டாம் கால யாக பூஜை, உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வெள்ளி கலச அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.