/
கோயில்கள் செய்திகள் / மடத்துக்குளம் குலசேகரசாமி கோவிலில் கும்பாபிஷேகம் சிலைகளுக்கு வண்ணம் சேர்ப்பு
மடத்துக்குளம் குலசேகரசாமி கோவிலில் கும்பாபிஷேகம் சிலைகளுக்கு வண்ணம் சேர்ப்பு
ADDED :2380 days ago
மடத்துக்குளம்:மடத்துக்குளம் குங்கும வல்லியம்மன் உடனமர் குலசேகரசாமி கோவிலில் கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகிறது.மடத்துக்குளம் தாலுகா சோழமாதேவியில், குங்கும வல்லியம்மன் கோவில் உள்ளது. பல நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்ட இந்தக்கோவிலில், கும்பாபிஷேகம் நடந்து பல ஆண்டுகள் கடந்துள்ளன.இதனால் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த, திட்டமிடப்பட்டு, பக்தர்கள் இணைந்து இதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர். தற்போது, சிலைகளுக்கு வண்ணம் சேர்க்கும் பணி நடக்கிறது.
இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், ’கும்பாபிஷேக பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இதற்கான நிதிகள் பக்தர்களிடமிருந்து பெறப் படுகிறது. நன்கொடை வழங்க விரும்பும் பக்தர்கள் கோவில் அறக்கட்டளை நிர்வாகத்தினரை அணுகலாம்’ என்றனர்.