உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கட்டாம்பட்டி விநாயகர், முத்தாலம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

செங்கட்டாம்பட்டி விநாயகர், முத்தாலம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

வத்தலக்குண்டு:செங்கட்டாம்பட்டி விநாயகர், முத்தாலம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல்நாள் கணபதி ஹோமம், லட்சார்ச்சனை நடந்தது. இரண்டாம் நாள் கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பூஜைகள் நடந்தன. நேற்று காலை 9.45 மணிக்கு கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. குழுத் தலைவர் தாமோதரன், உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், கவுன்சிலர் மதுரைவாணன், ஊராட்சி தலைவர் கணேசன், பழக்கடை ரமேஷ் ஏற்பாடுகளை செய்தனர். ரெட்டியார்சத்திரம் மோகனசுந்தரம் குழுவினர் கும்பாபிஷேகம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !